søndag 18. desember 2011

அன்பின் அரசியலாளர்களே!



தமிழ்மக்களாகிய நாம் தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை என்ற நான்கையே வலியுறுத்துகிறோம்."நம் நிலம் நமக்கு வேண்டும்"
இங்ஙனம்
மக்கள்

fredag 18. november 2011

மக்களே வெல்வர்!

எமது மக்களின் ஆன்ம பலத்தின் முன் எதிரி தோல்வியடைகிறான்.
17 November, 2011 by admin
மக்களே வெல்வர்!

அன்பிகுரிய என்னின மக்களே!

கடந்த 25வருடங்களாக புலம்பெயர் தேசத்தில் தமிழீழ தேச விடுதலைக்காக பணி செய்து வருபவன் எனும் வகையில் எனது சில கருத்துகளை தமிழ் மக்களிடம் பதிவு செய்ய விரும்புகிறேன். நான் நேரடியாக உங்கள் முன் கானொளியில் தோன்றி உரையாடவே விரும்பினாலும் சில காரணங்களுக்காக அதைத் தவிர்க்க வேண்டியுள்ளது. மக்களை பிளவு படுத்தாத நஞ்சை விதைக்காத கருத்துகள் பெயரின்றி வந்தாலும் பரவாயில்லை என்பதே என் நிலைப்பாடு. ஏனெனில் நாம் தொடர்ந்து செய்யவேண்டிய பணிகள் இச்சிறு விடயம் மூலம் சங்கடங்களுக்கு உள்ளாவதை நான் விரும்பவில்லை. புலம்பெயர் தேசத்தில் தேசியத்துக்காக உழைப்பவர்களை குழுவாதப்படுத்தி ஓரம்கட்டும் சதிகளின் மத்தியில் நாம் மிகவும் அவதானமாகவும் நிதானமாகவும் நுண்ணறிவுடனும் செயல்படுவதே தமிழினத்துக்கு நன்மை பயக்கும். எனவே இன்றைய சூழ்நிலையில் முகத்தைவிட கருத்துக்களே போதுமானது என எண்ணுகிறேன். சரியான கருத்துக்கள் மட்டும்தானே எதையும் சரியாக வழிநடத்தும். எனவே எனது தாழ்மையான கருத்துகளை மட்டும் பதிவு செய்வது போதுமானதல்லவா.

இன்று தமிழ் மக்களிடையே திட்டமிட்டு உருவாக்கப்படும் சில தவறான கருத்துகளை, அதை புரிய பிரயத்தனப்படும் மக்களுக்கு தெளிவு படுத்துவது அவசியமாகவுள்ளது! கிட்டத்தட்ட கடந்த 25 வருடங்களாகவே தமிழர் ஒருங்கிணைப்புக்குழு எனும் அமைப்பு பல்வேறு நாடுகளிலும் உருவாக்கப்பட்டு தேச விடுதலைக்காக பணியாற்றி வருகின்றன. இவை போராட்ட வளர்ச்சியில் தேசியத்தலைவரின் வழிகாட்டலில் காலப்போக்கில் அனைத்துலக செயலகத்தின் ஒருங்கிணைப்பில் பணியை தொடர்ந்தன. எனவே இவ்வமைப்புகள் இயல்பாகவே விடுதலைபோராட்டத்தில் பணி செய்ய விரும்பிய உலகெங்குமுள்ள ஆயிரக்கணக்கான தேசப்பற்றுள்ள தமிழர்களால் அவர்களது அர்ப்பணிப்புகளுடன் தோற்றம் பெற்று பணிகள் மேற்கொள்ளப்பட்டு விடுதலை நோக்கி பயணிப்பதை மக்கள் அறிவார்கள்.

எனவே தமிழ் மக்களை தேசியத்துடன் ஒருங்கிணைக்கும் பணி இவ்வமைப்புகளுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவு தற்போது அதிகரித்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால் கடந்த 2009 மே மாதத்தின் பின் இவ்விதம் பணிபுரிந்தவர்களில் சிலர் தோல்வி மனப்பான்மையின் காரணத்தினாலும் மேலும் சிலர் ஒருசில சக்திகளின் தூடுதல்களாலும் ஒதுங்கி சென்று தமது தனிப்பட்ட வாழ்கையை வாழ்கிறார்கள். எந்த ஒரு அமைப்பிலும் சுயநலம் கலந்தவர்களும் , பதவி ஆசையுள்ளவர்களும் போராட்டத்தில் புலிகள் தியாகம் செய்ய, வெற்றி வாகை சூட, புகழின் உச்சிக்கு செல்ல இங்கு அதன் மூலம் தமக்கு செல்வாக்கு தேடிய ஒருசிலரும் இருப்பார்கள் என்பதும் உண்மையே. இப்போது அவ்வாறான சமூக அந்தஸ்து கிடைக்காததால் இவ்வாறானவர்கள் சிலர் ஒதுங்கியும் உள்ளார்கள்.

ஆனால் இது சாதாரண மனித இயல்பே! எனினும் காலப்போக்கில் புதியவர்கள், இளையவர்கள் இணைந்து மேலும் பலம் சேர்த்து மக்களை தேசியத்துடன் ஒன்றிணைத்து முன்னோக்கி செல்ல வேண்டியதுவே காலத்தின் கட்டாயம். மக்கள் இதில் ஆர்வம் காட்டாததும் சோர்ந்து இருப்பதுவும் கூட நான் மக்கள் மீதும் குறிப்பாக இளையவர்கள் மீதும் அன்போடும் அக்கறையோடும் முன்வைக்கும் ஒரு குற்றச்சாட்டே.

ஆயினும் 2009 மே மாதத்தின் பின் வேறு சில விடயங்களும் புலம்பெயர்தேசங்களில் அரங்கேறத் தொடங்கியுள்ளன. சிலர் திட்டமிட்டு மக்கள் பிரிந்துள்ளார்கள், பணியாளர்கள் பிரிந்துள்ளார்கள் எனக்கூரிக்கூறி மக்களை பிரிக்கும் கைங்கரியத்தை கச்சிதமாக செய்து வருகிறார்கள். இதில் முக்கியமாக முன்னர் தேசியத்துடன் பயணித்த ஊடகங்களும் ஒரு சில தனி நபர்களும் தற்போது நிலை மாறி இவ்வாறான கருத்துகளை திட்டமிட்டு விதைத்து விட்டு மக்களை பிளவுபடுத்தி வருகின்றனர்.

35 வருடங்களாக விடுதலைபோராட்டம் நடத்திய மக்கள் இவற்றை எளிதில் புரிந்து கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. எனினும் புலம்பெயந்த சூழலில் இந்த அவசர வாழ்கையில் சில மக்களுக்கு இவற்றை புரிவதில் கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது. நான் மேற்கூறிய, மக்களிடம் பிளவு, அமைப்புகள் பிரிந்து மோதிக்கொள்கின்றன என பிரச்சாரம் செய்யப்படுவதன் பின்னணியை நாம் சற்று ஆராய வேண்டும். நான் ஏற்கனவே கூறியது போல் புலம்பெயர்தேசத்தில்தலைவரால் உருவாக்கப்பட்ட அமைப்புகள் மக்கள் பலத்துடன் கூடிய ஒரு சக்தி. இதை ஒரு குழு என யாரும் வகைப்படுத்தமுடியது. இதன் பணியாளர்களில் பெருன்பான்மையானோர் கடந்த 15 தொடக்கம் 25 ஆண்டுகளாக புலம்பெயர்ந்து வாழும் மக்களே!

நாட்டில் இருந்து தற்போது வந்தவர்கள் அல்ல. எனினும், இவ்வமைப்புகளும் ஏன் எந்த அமைப்புமே கொள்கையில் தவறிழைத்தால் பணியாளர்களும் மக்களும் கூட கேள்வி எழுப்பலாம்.
எனவே குழப்பங்கள் தெளிவடைய மக்கள் சிந்தித்து விடை காண வேண்டிய முக்கிய கேள்விகள் சில உள்ளன. இதற்குரிய விடைகளை காண்பது மக்களாகிய உங்களின் பொறுப்பே! விழிப்பான மக்கள் கூட்டமே விடுதலையை வென்றெடுக்கும்! "விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி". எமக்காக மற்றவர்கள் இதை செய்வது தவறாகும். ஏனெனில் ஒவ்வொரு தமிழனுக்கும் விடுதலைக்கான பொறுப்புணர்வு இருக்க வேண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். மேலே கூறிய தலைவரால் உருவாக்கப்பட்ட, இனவழிப்புப் போரில் சிதையாத கட்டமைப்பை ஒரு குழுவாக சித்தரிக்க எண்ணுவோர் யார் ?
இவர்கள் எத்தனை பேர்?
இவர்களின் பின்புலம் என்ன?
இவர்கள் எங்கிருந்து இயங்குகிறார்கள்?
இவர்களில் சிலர் எப்போது புலம் பெயர்ந்தார்கள்?
இவர்கள் கூறும் பிரிவின் பெயர் என்ன?
இவர்கள் கூறும் பிரிவுக்கு உரித்துடையவர் யார்?
இவர்களுக்கு இப்பிரிவுகளின் பெயர்களை பாவிக்கும் அதிகாரம் யாரால் வழங்கப்பட்டது?
திடீர் என இவர்களுக்கு புலம்பெயர் தேசத்தில் என்ன வேலை?
2009 இன் பின் தப்பி வந்த நூற்றுக்கணக்கான முன்னாள் போராளிகள் வந்த நாடுகளில் அமைதியாக இருக்க, எத்தனையோ பேர் பல நாடுகளிலும் ஊரூராயும் அலைய
ஒருசிலர் மட்டும் எவ்விதம் இங்கு வந்தார்கள்?
எவ்விதம் இவர்களால் பகிரங்கமாக நடமாட முடிகிறது?
எந்தெந்த நாடுகளில் குழப்பங்கள் இருக்கின்றன?
இவர்களோடு நிற்கும், ஏற்கனவே இங்கிருந்தவர்களின் கடந்த கால நடவடிக்கைகள் என்ன?
அவர்களின் பின்னணி என்ன?
2009 ,2010 ஆண்டுகளில் போராட்டத்துக்காக இவர்கள் என்ன செய்தார்கள்?
இவர்களின் பின்னால் எத்தகைய சக்திகள் நிற்கின்றன?

மேற்கூறிய கேள்விகளுக்கு என்னால் விடையளிக்க முடியும். எனினும் விடை தேடும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன். நான் விடையளிப்பது சனநாயகமல்ல. ஏனெனில் போராட்டத்தில் உங்களுக்கும்( மக்களுக்கும்) பொறுப்புள்ளது. குழப்பங்கள் ஏற்படும் சம காலங்களில் அதற்கான தெளிவுகள் தேடுவது கடினமாக இருக்கலாம். எல்லா உண்மைகளையும் புரிந்து கொள்ள காலம் எடுக்கலாம். ஆனால் செயல்பாடுகளில் இருந்தும் கருத்துக்களிளிருந்தும் நீங்கள் உள்நோக்கங்களை கணியுங்கள்.

எமது மக்கள் போராட்ட வரலாற்றை உணர்ந்தவர்கள்! தேசப்பற்றுள்ளவர்கள்! உலகில் ஏனைய நாடுகளில் இவ்வாறு அதிகார மையங்கள் அழிக்கப்பட நாடுகளில் இனங்களின்மத்தியில் எதிரி எவ்வாறு அவ்வினத்தவரையே தமக்கு சார்பாக பயன்படுத்தினான் என்பவற்றையெல்லாம் நாம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். நடப்பவை ஏன் இப்படி நடக்கின்றன என நிதானமாக நோக்க வேண்டும்? ஆற்றுநீரை வெள்ளமா கொண்டு போய் விடும்? மாவீரருக்கான உணர்வுகளும் இனத்தின் இலட்சியமும் எல்லாத் தமிழரதும் உள்ளத்தில் இருக்கும் வரை தமிழினம் ஏன் குழப்பமடையவேண்டும்?

எமது மக்களின் ஆன்ம பலத்தின் முன் தானே எதிரி மீண்டும் மீண்டும் தோல்வியடைகின்றான்....!

onsdag 9. november 2011

søndag 2. oktober 2011

கையெழுத்துகள்

அன்புத் தோழர்களே!

ஈழ இனப்படுகொலையை விசாரிக்கக் கோரி இதுவரை எத்தனையோ கையெழுத்து
இயக்கங்கள் இணையத்தில் தொடங்கப்பட்டுள்ளன. நீங்களும் அப்படி எத்தனையோ
விண்ணப்பங்களில் கையெழுத்திட்டிருப்பீர்கள்.

ஆனால் இப்பொழுது, ஈழ இனப்படுகொலைக்கு விசாரணை கோரி 'அமெரிக்க வெள்ளை
மாளிகையின் இணையத்தளத்திலேயே' ஒரு விண்ணப்பம் தொடங்கப்பட்டிருக்கிறது!
எனவே இது கண்டிப்பாக அமெரிக்க அதிபரின் நேரடிப் பார்வைக்குக் கொண்டு
செல்லப்படும் என நாம் உறுதியாக நம்பலாம். ஆகவே கருணை கூர்ந்து இதில்
கையெழுத்திடுங்கள் நண்பர்களே! வரும் அக்டோபர் 29க்குள் இதில் 5000
கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டாக வேண்டுமாம். எனவே நீங்கள் இதில்
கையெழுத்திடுவதோடு மட்டுமின்றி, தங்கள் குடும்பத்தினரின்
கையெழுத்துகளையும் தயவு செய்து சேர்க்கும்படியும், மின்னஞ்சல், பேஸ்புக்,
டுவிட்டர் முதலியவற்றின் மூலம் உங்கள் நண்பர்களையும் அவர்களின்
குடும்பத்தினரையும் கூட இதில் கையெழுத்திடச் செய்யும்படியும் அன்போடு
கேட்டுக் கொள்கிறேன்!

கையெழுத்திடச் சொடுக்குக:
https://wwws.whitehouse.gov/petitions#!/petition/support-international-investigation-war-crimes-and-other-human-rights-abuses-committed-sri-lanka/h0bvBbSg

உங்கள்:
--இ.பு.ஞானப்பிரகாசன்.

நாள்: 2.10.2011.

torsdag 8. september 2011

'கிரீஸ் பூதங்கள்'

அன்புள்ள அனைத்துலக தமிழீழ மக்களே

கடந்த ஒரு மாத காலமாக 'கிரீஸ் பூதங்கள்'; என்று எமது மக்களால் அழைக்கப்படும் ஒரு வகையான மர்ம மனிதர்களின் நடமாட்டம் சிறுபான்மை இன மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அதிகரித்திருக்கிறது. தமது அடையாளத்தை மறைப்பதற்காக ஒருவகை கறுப்பு களியை உடலெங்கும் பூசியுள்ளதாலும் கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்குவதாலும் அங்குள்ள மக்கள் 'கிரீஸ் பூதங்கள்' என்று அந்த மர்ம மனிதர்களை அழைக்கிறார்கள். இதில் என்ன துயரம் எனில் இந்த மர்ம மனிதர்களின் இலக்கு சிறுபான்மை இனப்பெண்களேயாகும்.

இதில் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் இதுவரை தாக்குதல் நடந்த இடங்களில் எந்த திருட்டும் நடக்கவில்லை, பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. பெண்கள் உடலிலிருந்து இரத்தம் பீறிடூம் அளவு கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக அவர்களது முலைப்பகுதிகளை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பல இடங்களில் பதிவாகியிருக்கிறது. இந்த மர்ம மனிதர்களை பொதுமக்கள் சிறைப்பிடிக்க முற்பட்டபோது அவர்களை சிறீலங்கா அரசின் இராணுவம் காப்பாற்றி தம்மோடு அழைத்து செல்வது தினமும் நடந்து வருகிறது.


சிறீலங்கா அதிபர் இன்று மே 18 இல் நடத்திய அழித்தொழிப்பின் விளைவாக சர்வதேச அளவில் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளார். அவர் அதிலிருந்து விடுபடுவதற்காக ஒரு ஜோதிடரின் பரிகாரமாகவே சிறுபான்மை இனப்பெண்கள் தாக்குதலுக்குள்ளாகிறார்கள் என்பது அங்குள்ள ஊடகவியலாளர்களின், பெரும்பான்மை மக்களின் கருத்து. சில சிங்கள ஊடகவியலாளர்கள், அதிபரது குடும்ப உறுப்பினர்களை, அவரது கட்சி அங்கத்தவர்களை ஆதாரம் காட்டி இதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் துரதிஸ்டவசமாக இதை ஊடகங்களில் முன்வைக்க முடியாத நிலை. முதற்காரணம் அச்சம். அதற்கான காரணத்தை உலகிலுள்ள ஊடக அமைப்புக்களை தொடர்பு கொண்டு கேட்டால் அங்குள்ள கருத்து சுதந்திரத்தை உங்களுக்கு அவர்கள் கதைகளாகச் சொல்லக்கூடும்.

இது ஒரு ஆய்வாளரின் கருத்து. இந்த வரிகள் இதன் மூலத்தையும் பின்னணியையும் நுண்ணரசியலையும் உணரபோதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

சிறீலங்கா அரசின் இனவாதம் என்பது அதன் மத அடிப்படைகளிலும் அதன் விளைவான பிற்போக்கு தனங்களிலும் இருந்து தோற்றம் பெற்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என்று நான்கு வகையான மதங்கள் அந்நாட்டில் உள்ள மக்களால் பின்றபற்றப்படுகிறபோதும் பௌத்தபேரினவாத சிந்தனையை மையப்படுத்தியே அதன் அரசியலமைப்பும் ஆட்சியதிகாரமும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

எல்லா அரசியல் நிகழ்வுகளுக்கும் நாட்குறித்த சிங்கள பௌத்த பிக்குகள் இனப்படுகொலை- போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து தப்புவதற்கும் 'மகாவம்ச மனநிலை' யோடு தமிழ்ப்பெண்களின் இரத்தபலியைக் கேட்கிறார்கள். தமிழர்களின் படுகொலைகளுக்கு எந்த பிராந்திய - பூகோள அரசியல் காரணமாகியதோ அதே காரணம் இன்று சிங்கள அரசனையும் கழுவிலேற்றக் காத்திருக்கிறது. அனைத்து சிறுபான்மை இனப்பெண்களின் முலைகளை அறுத்தெறிந்தாலும் அவர் தப்பப் போவதில்லை. அது வேறு கதை. ஆனால் அதற்குள் சிறுபான்மை பெண்களின் மீது வன்முறையை செலுத்தி ஒரு இனச்சுத்திகரிப்புக்கான வேலைகளை பல்வேறு வழிகளில் தொடங்கவிட்டது சிங்கள அரசு. அதன் மிக அண்மைய வடிவம்தான் இந்த 'கிரீஸ் மனிதர்கள்'.

'கிரீஸ் பூதங்கள் : இனச்சுத்திகரிப்பின் நுண்மையான வடிவம்'


--
“வீழ்வது அவமானமல்ல. ஆனால் வீழ்ந்து கிடப்பதுதான் பெருத்த அவமானம்”.

søndag 10. juli 2011

சேவியர் ஐயா அவர்களே!


சேவியர் ஐயா அவர்களே!

நோர்வேயிலிருந்து கோகுலன் எழுதிக்கொள்வது... உங்களை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் விட்டிருந்தேன். நீங்கள் தொடர்பு கொள்ளவில்லை. காரணம் விளங்கவில்லை.
ஆனால் youtube இல் இன்று உங்கள் உரை கேட்டேன். மேலே உள்ள லிங்க் இல் உள்ளது. உரையை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நீங்கள் கருத்து ரீதியாக தலைகீழாக மாறிவிட்டதை உணர்ந்தேன்.

சிங்கள அடக்குமுறைக்கெதிராக 30 வருடங்களாக போராடிய உயிர்நீத்த 30000 இற்கும் மேலான போராளிகளையும் 2 இலட்சம் மக்களையும் கொச்சைபடுத்துவதாக உங்கள் கருத்துகள் அமைந்திருந்தன.
"பெரிய சக்திகளுடன் போராடி வெல்லமுடியாது அவர்களுடன் சேர்ந்து அவர்களுடன் பேசி கதைத்து அவர்கள் தரும் சலுகைகளை வாங்கி அடிமைகளாக வாழுமாறு" நீங்கள் மக்களுக்கு பரிந்துரைக்கின்றீர்கள். 50 வருடங்களுக்கு முன் தந்தை செல்வா தலைமையில் அறவழியில் போராடிய உங்கள் தலைமுறைக்கு கிடைத்தது என்ன? அடியும் உதையும் மட்டும் தான். அந்தத்தலைமுறையால் ஏதாவது உரிமைகளை பெற முடிந்ததா? அறவழிப் போராட்டம் தோற்றதால் தானே ஆயுதப்போராட்டம் உருவானது...இப்போராட்டத்தை ஆதரித்து தானே நீங்கள் விடுதலை புலிகளின் புலம் பெயர் மேடைகளில் எல்லாம் முழங்கினீர்கள். அப்போதெல்லாம் இல்லாத இந்த ஞானம் திடீரென்று இப்போது எங்கிருந்து வந்தது? மேடைகள் கிடைத்தால், செல்வாக்கு இருக்கும், பலம் இருக்கும் இடத்தில் அதற்கேற்றால் போல் கதைப்பதுதான் உங்கள் கொள்கையா?
எனக்கு விளங்கவில்லை.
ஆயுதப்போராட்டம் பற்றி இழிவாக நீங்கள் கூறும் கருத்துகள் தோல்விமனப்பான்மையால் வந்தது என்பதே என்கருத்து. போராட்டம் ஒரு போதும் தோல்வியடையவில்லை. ஆனால் நீங்கள் கூறும் சக்திகள் தான் தொல்விகண்டுள்ளன. இதை நான் விளக்குகிறேன்... 20 நாடுகளின் துணையுடன் 4 வல்லரசுகளின் துணையுடன் இலங்கை போரிட்டது. நாம் தனித்து நின்று போரிட்டோம். எமது பக்கம் நியாயமும் தர்மமும் மட்டும் தான் இருந்தன. அத்துடன் கொள்கையில் உறுதியான இனப்பற்றுள்ள வீரமுள்ள மானமுள்ள மக்கள் நின்றார்கள். It was a unequel war என cannel4 தொலைக்காட்சியே கூறுகிறது. 4 இலட்சம் மக்களை 70,000 மக்கள் மட்டுமே எனக்கூறி 2 km பரப்பளவுக்குள் கொண்டுவந்து அதை பாதுகாப்பு வலயம் எனவும் கூறி கொன்றோளித்தது யார்? நான்கு இலட்சம் மக்கள் இருந்த இடத்தில் எழுபதாயிரம் எனக்கூறி குறைந்த உணவை அனுப்பி பட்டினி போட்டுக்கொன்றது யார்? மருந்துகளை தடை செய்தது யார்?போசுபரசுகுண்டுகளை மக்கள் மீது போட்டது யார்? விமானத்திலிருந்து மக்கள் மீது குண்டுகளை போட்டு கொன்றது யார்? உலகமெங்கும் மக்கள் ரோட்டில் நின்று யுத்தநிறுத்தம் கொண்டு வர போராடியபோது அதை கொண்டு வராமல் விட்டது யார்? நீங்களும் எங்களுடன் நின்று போரடிநீர்களே யார் திரும்பிப்பார்த்தார்கள்? மனிதகுலத்திட்கேதிரான மானிட நேயத்திட்கெதிரான குற்றங்களை புரிந்தது யார்? உலகமனட்சாட்சியின் முன் சமாதானமாக பேசி தீர்வு தேடிய எம்மை ஏமாற்றியது யார்? இலங்கையும் சர்வதேசசமூகம் எனக்கூறிய நாடுகளும் தான். இதை உங்களால் மறுக்க முடியுமா?
இவற்றையெல்லாம் எதிர்த்து நீதி கேட்டு பட்டினிக்கும் சாவுக்கும் அடிபணியாது அநீதிக்கும் அராஜகத்துக்கும் அடிபணியாது கொள்கைக்காக எமது இனப்போராளிகள் மடிந்தனர். எம்மினமா தோற்றது?. அல்லது மனிதகுலத்திகே இழிவான அநாகரிகமான, பேடித்தனமான, சனத்தின், ஒரு இனத்தின் அபிலாசைகளை , உரிமைகளை மதிக்காத நீங்கள் ஒட்டி உறவாட அழைக்கும் சிங்கள அரசும் சேர்ந்து நின்ற அரசுக்களுமா அல்லது நாமா தோற்றோம்? யார் தோற்றார்கள்? உங்கள் மனட்சாட்சியை தொட்டு கூறுங்கள்.

வென்றது தமிழர்கள் மட்டுமில்ல...ஒட்டுமொத்த மனிதகுலமும், அடக்கப்படுகிற எல்லா இனங்களுமே வென்றன... ஏனெனில் இந்த இருபதாம் நூற்றாண்டில் நவீன நாகரிக உலகில் சாட்சிகளின்ரி ஒறினத்தை கொன்று ஒழிக்கலாம் என நினைப்பது அதை நடத்துவது மனிதகுலத்திட்கேதிரான மாபெரும் குற்றமும் துரோகமும் ஆகும். ஆயுதத்பலத்தாலும் அராஜகத்தாலும் 20 இற்கும் மேற்பட்ட அரசுகள் சேர்ந்து போரிட்டாலும் அநீதிக்கெதிராக தர்மத்தின் பக்கம் நின்று போரிட்ட இனமே வென்றது.

கொள்கை ரீதியான பிணக்கு ஒன்று. ஒரு புறத்தில் உலக குத்துசண்டை வீரன் ஒருவன். அவனுக்கு ஆதரவாக பலர். ஆனால் அவன் நிற்பது அநீதியின் பக்கம். ஆனலும் அவனை எதிர்க்க எல்லோரும் தயங்குகிறார்கள். பயத்தால் நடுங்குகிறார்கள். எதிர்க்க யாரும் இல்லை. ஒரு சாதாரண சிறுவன் மட்டும் எழுந்து களத்துக்கு வருகிறான். அவனுக்கு தன் பலம் தெரியாததல்ல இது சமச்சீர் அற்ற யுத்தம் என அவன் அறியாதவனல்ல.... ஆனால் அவன் முன்வராவிட்டால் நீதி செத்துவிடும் எனும் நிலை. அதர்மம் வென்று விடும் எனும் நிலை. அச்சமற்ற அச் சிறுவனின் கால் களத்தில் பதிந்தது. அக்கணமே நீதி தேவதை பிழைத்துக் கொண்டாள். தர்மம் வென்றுவிட்டது. மனிதகுலம் சிலிர்த்து நிமிர்ந்தது... குத்துச்சண்டை வீரன் பலரை வென்றிருந்தாலும் மிகப்பலம் வாய்ந்தவனாக இருந்தாலும் சாதாரண ஒரு சிறுவனின் மனோபலத்தின் முன்னும் நீதி,நியாயம்,தர்மம், மனிதநேயம் , தன்னினம் மீது அவன் கொண்ட பற்றின் முன்னும் தோற்றுப்போனான். அவனை ஆதரித்தவர்கள் வெட்கித் தலை குனிந்தனர்.

இதை இன்று உலகம் உணர்கிறது. மனிதகுலவரலாற்றில் தமிழினம், விடுதலை புலிகள் தலைமையில் நிகழ்த்தியது மனிதகுலதிட்கான மனிதநேயதிட்கான மனித உரிமைகளுக்கான தர்மயுத்தமாக வரலாற்றில் பதியப்பட்டுவிட்டது. அதை நிகழ்த்தியவர்கள் எம்மினப்போராளிகள்.
"விடுதலைபுலிகளைப்போல் ஓர் உன்னதமான விடுதலை இயக்கத்தை ஜீரநிக்கக்கூடிய தகுதி இந்த உலகத்திற்கு இருக்கவில்லை" என ஒரு சிங்கள குருவானவர், விரிவுரையாளர் குறிப்பிட்டுள்ளார். ...ஆகவே நீங்கள் தெரிவிப்பது தோல்விமனப்பன்மையில் அடிமை மனப்பான்மையில் எழுந்த கருத்துகளாகவே எனக்குப்படுகிறது. இயேசுவை வணங்கும் நீங்கள் மக்களை காக்க அநீதிகேதிராக இயேசு போராடினார் என போதிக்கும் நீங்கள் அநீதிகேதிராக குரல் எழுப்பாது அடிமைத்தனத்தை மக்களுக்கு ஊட்டுவது எந்தவிதத்தில் சரியானது என நினைத்துப் பாருங்கள்.

இரண்டு இலட்சம் இராணுவம் தமிழர் பகுதிகளில் இருப்பதாகவும் அவர்கள் தம் பாட்டில் மக்களுக்கு தீங்கு செய்யாது வாழ்வதாகவும் கூறுகிறீர்கள். எமது மக்களை அச்சுறுத்தி பெண்களை சிறுமிகள் பலவந்தப்படுத்தி இளைஞர்களை அச்சுறுத்தும் படுகொலை செய்யும் இராணுவத்தை நீங்கள் சாதுக்கள் என அத்தாட்சி கொடுக்கிறீர்கள். உலகமே இனப்படுகொலை புரிந்தவர்கள் எனக்கூறும் இராணுவத்தை கோதாபய கூட இந்தளவுக்கு புகழமாட்டான். அவர்கள் தங்கள் பாட்டில் இருக்கிரார்களேன்றால் சிங்களப்பகுதிகளில் இருக்கலாமல்லவா? ஏன் தமிழர் நிலத்தில் நிற்க வேண்டும்?
உங்களுக்கு இன்னுமொரு கருத்தை கூற விரும்புகிறேன். ஆயுதப்போராட்டம் தொடங்கும் என்று உங்களுக்கு யார் கூறியது? அதை காலம் தீர்மானிக்கட்டும். ஆனால் இன்று எம்மை உலகம் திரும்பிப்பார்க்கவைத்தது ஆயுதபோரட்டம்தான். இனஅழிப்பு நடைபெறுகிறது என நிரூபித்தது ஆதப்போராடம்தான். இப்போது எமக்கு ஆயுதப்போராட்டம் தேவையில்லை. ஆதப்போராட்டதின்மூலம் நாம் எதை சதிக்கவேண்டுமோ அதை சாதித்து விட்டோம்.

முள்ளிவாய்க்கால் போரின்மூலம் எவரும் இனி எம்மினத்தை இவ்வுலகில் பாதுகாக்கமாட்டார்கள், எமது மக்களுக்கு பாதுகாப்பு தனியரசு தான் என்பதை நிரூபித்துவிட்டோம். உலகம் அதை ஏற்றுக்கொள்ளச் செய்வதுதான் எம்முன் உள்ள பணி. இதைச்செய்ய ஆயுதம் தேவையில்லை.

மிகப்பெரிய இனப்படுகொலை நடந்தும் நீங்கள் கூறும் சிங்களவர்களும் அரசுகளும் மூடிமறைக்கவே முயற்சிதன முயற்சிக்கின்றன. இதற்கெதிராக நாம் ஆயுதத்ப்போராட்டமா செய்தோம்? சனநாயக முறையில் போராடித்தான் கொஞ்சம் கொஞ்சமாக உண்மைகளை வெளியில் கொண்டு வருகிறோம். இதுதான் போராட்டத்தின் அடுத்தகட்டம்.

ஆனால் இன்றுள்ள பிரச்சனை என்னவெனில் இந்த உண்மைகளை ஏற்றுக்கொள்ளவைக்க எமது புலம்பெயர் மக்கள் செய்யும் பணியை செய்யவிடாது இனவழிப்பு நடந்ததை மறைக்க பல சக்திகள், எம்மை அழிக்க துணைநின்ற அதே சக்திகள் முயற்சி செய்கின்றன. எமது போராட்டம் இனவழிபுக்கேதிரான போராட்டம் எனும் கருத்தை மறைக்கவும் அவர்களின் அடிமைக்கருத்துகளை எம்மவரிடையே விதைக்கவும் அவர்கள் செய்த மனிதகுலதிட்கேதிரான
குற்றங்களில் இருந்து தப்பவும் உங்களைப்போன்றவர்கள் தெரிந்தோ தெரியாமலோ துணை செய்கின்றனர். 60 வருட போராட்டத்தின் இழப்புகளின் தியாகங்களின் பெறுபேறுகளை இழக்க வைக்கும் செயல்கள் இவை என நீங்கள் உணரவில்லையா?

உங்களிடம் இன்னுமொரு கேள்வி? பெரியசக்திகளுடன் சண்டித்தனம் செய்யக்கூடாது சேர்ந்து கதைத்து எல்லாம் பெறலாம் எனக்கூறும் நீங்கள் ஏன் எமது புலம் பெயர்ந்த மக்களிடம் பணத்தை உதவியை எதிர்பார்கிறீர்கள்? சிங்களவர்களுடனும் ஏனைய சக்திகளுடனும் கதைத்து எமது மக்களுக்கு உதவிகளை நிவாரணங்களை பெற்றுக்காட்டலாமே. இதைகூட செய்விக்க முடியாத நீங்கள் எவ்வாறு சிங்களவருடனும் அவனுக்கு உதவிய சக்திகளுடனும் கூடிக்குலவி, பேசி, சிரித்து எமது அரசியல் உரிமைகளை பெற்றுதருவீர்கள் எனக் கூறுவீர்கள்.
எமது மக்களுக்கு உதவி செய்யக்கூடாது என்பதற்காக நான் இதை கூறவில்லை வாதத்திற்காகவே கூறுகிறேன். உங்கள் கருத்தில் உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்டவே கூறுகிறேன். எமது மக்களுக்கு சிங்களவர்களோ மற்றவர்களோ உதவப்போவதில்லை என்பது எனக்கு தெரியும். இன்றைய நிலையில் நாம் தான் எமது மக்களுக்கு உதவமுடியும். ஆனால் நீங்கள் கூறும் கருத்துகள் எமது மக்களின் அவலத்தை கூறி அந்த அவலத்தின் மூலம் பரிதாபதிட்குரிய மக்களாக மாற்றி உரிமைகளுக்காக போராடாத இனமாக மாற்றி நிரந்தரமாக அவர்களை அடிமைகளாக ஆக்கும் திட்டத்துக்கு துணை போவதாகவுள்ளது.
நாம் இங்கு போராடினால் அங்கு மக்கள் கஷ்டப்படுவர்களாம். இதுவும் உங்கள் முரண்பாடான கருத்துகளில் ஒன்று. சிங்களவர்களுடன் எல்லாவற்றையும் மறந்து பேசி சிரித்து விளையாடி கேட்டால் கிடைக்கும் எனும் நீங்களே நாம் இங்கிருந்து கேட்டால் எமதுமக்களை அவர்கள் அழித்துவிடுவார்கள் என மிரட்டுகிறீர்கள். அத்தகைய கொடுமைக்காரர்களுடன் உறவு வைக்குமாறு கூறுகிறீர்கள். இது என்ன நியாயம்?

நீங்கள் நேர்மையாக எனது கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் பதில் தருவீர்கள் என நம்புகிறேன். ஒற்றுமை, ஜனநாயகம், பேச்சுவார்த்தை (ஏனெனில் எமை அழிப்பவனுடையே பேசி வெல்லலாம் என நீங்கள் போதிப்பதால்) என்பவற்றில் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் நீங்கள் எனது கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் பதிலளிப்பீர்கள்.

இப்படிக்கு
உண்மையுள்ள
கோகுலன்

lørdag 4. juni 2011

torsdag 2. juni 2011

Vyko EU

ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்!!

அன்புடையீர்!

வணக்கம்! 'ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு (Tamils for Obama)' என்ற
உலகப்புகழ் பெற்ற அமைப்பு, தமிழீழம் வேண்டுமா இல்லையா என ஈழத்
தமிழர்களிடையே வாக்கெடுப்பு நடத்தக் கோரி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு
விண்ணப்பம் அனுப்புகிறது. உலகெங்கும் உள்ள மக்கள் இதில் கையெழுத்திட
வேண்டும் என்பது அந்த அமைப்பின் வேண்டுகோள். கவனிக்க! ஈழத்
தமிழர்களுக்காக நடத்தப்படும் எத்தனையோ கையெழுத்து இயக்கங்களைப் போல்,
பத்தோடு பதினொன்றாக இதைக் கருத வேண்டாம்! அமெரிக்க அதிபரின் பெயரால்
நடத்தப்படும் உலகளாவிய ஓர் அமைப்பால் ஈழத் தமிழர்களுக்காகச்
முன்னெடுக்கப்படும் மிக முக்கியமான, சக்தி வாய்ந்த ஒரு கையெழுத்து
இயக்கம் இது! எனவே அருள் கூர்ந்து கையெழுத்திடுங்கள்! தமிழர் தனிநாடு மலர
உதவுங்கள்! ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்!!

கையெழுத்திடக் கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்குங்கள்!
http://www.tamilsforobama.com/Referendum2011/tamil.asp

நீங்கள் கையெழுத்திட்ட பின் இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும்
அனுப்பி அவர்களையும் இதில் கையெழுத்திடச் செய்யுங்கள்!

மிக்க நன்றி! வணக்கம்!

அன்புடன்:
இ.பு.ஞானப்பிரகாசன்.

søndag 15. mai 2011

தமிழீழ புரட்சிகர மாணவர்கள்

கூட்டமைப்புக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் விடுக்கும் கோரிக்கை!

தமிழர்களுக்கு தீர்வு வழங்குவது பற்றி பேச்சுக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது தொடர்ச்சியாக சிங்கள அரசுடன் ஈடுபட்டுள்ளது.

சிங்கள அரசும் உலகை ஏமாற்ற எப்பாடுபட்டாவது மாயையான போக்கையே தொடர்ந்தும் கடைபிடிக்கின்றது.

சிங்கள அரசியல்வாதிகளின் கபட நோக்கங்களை அறியாதவர்களாக தமிழ் அரசியல்வாதிகள் இருக்க முடியாது. அதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு மிக நன்றாக தெரியும்.

சிங்கள அரசின் பேச்சுவார்த்தை தொடர்பாக அவர்களுடன் பேசுவோம் இவர்களுடன் பேசுவோம் என அறிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர்ந்த தமிழர்களை மறந்துவிட்டதாகவே சிந்திக்க வைக்கின்றது.

சிங்கள அரசுடனான பேச்சுக்களை உடனுக்கு உடன் புலம்பெயர் தமிழர்களுக்கு அறியத்தந்து அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து செயற்பட வேண்டும் என தமிழீழ புரட்சிகர மாணவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றது.

புலம்பெயர்ந்த மக்கள் தாயகத்தை விட்டு வந்து வாழ்ந்தாலும் அவர்களின் ஒவ்வொரு நொடியும் தாயகத்தை நோக்கியதாகவே இருக்கின்றது.

தாயகத்தில் வாழும் மக்கள் தங்களுடைய சொந்த கருத்துக்களையே விருப்பு வெருப்புக்களையே ரகசியமாக கூட வெளியிட முடியாத கட்டத்தில் வாழ்கிறார்கள்.

புலம்பெயர்ந்த மக்கள் தாயக மக்களின் ஒத்த கருத்துக்களையே பிரதிபளிக்கின்றார்கள் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் வேறு நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து உலக நாடுகளுக்கு செல்லவில்லையே அவர்கள் அனைவரும் பல காலம் தாயகத்தில் வாழ்ந்தவர்கள் இன்றும் அறுக்கமுடியாத பிணைப்புடனேயே வாழ்கின்றார்கள் அவர்களுக்கு கண்டிப்பாக தெரியும் தாயக மக்களுக்கு என்ன வேண்டும் என்பது.

எனவே அதிக விளக்கங்களை தவிர்த்துக்கொண்டு புலம்பெயர்ந்த மக்கள்,அமைப்புக்கள், ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள் என அனைவருடைய கருத்துக்களும் சிந்தனைகளும் உள்வாங்கி பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என தமிழீழ புரட்சிகர மாணவர்களாகிய நாம் தமிழ்த் தேசியக் கூட்மைப்புக்கு கோரிக்கை விடுக்கின்றோம்

நாங்கள்
தமிழீழ புரட்சிகர மாணவர்கள்
thanks Athirvu

lørdag 14. mai 2011

lørdag 26. februar 2011

புலம்பெயர் நாடுகளிலும் வெற்றி பெறுகின்றதா, சிங்கள தேசியவாதம்?

அன்பின் தமிழுறவுகளே!
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் சிறிலங்கா அரசு தனது அத்தனை கவனத்தையும் புலம்பெயர் தமிழர்கள் மீது திருப்பியது. யுத்த பேரழிவுகளாலும், இராணுவ வன்முறைகளாலும் அச்சத்திற்குள் அடக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் மத்தியிலிருந்து தற்போதைக்கு எந்த எதிர்க்குரலும் எழப் போவதில்லை என்ற நிலையில், சிறிலங்கா அரசு மீது போர்க் குற்ற விசாரணை கோரியும், ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரியும் தொடர் போராட்டங்கள் நடாத்திவரும் புலம்பெயர் தமிழர்களது பலம் சிங்கள தேசத்தை அச்சுறுத்தியதால், அதற்கு எதிரான நடவடிக்கைகளில் சிறிலங்கா புலனாய்வாளர்களும், ஒட்டுக் குழு உறுப்பினர்களும் களம் இறக்கப்பட்டனர்.
சிறிலங்காவின் இந்த நகர்வுகளுக்குப் பின்னணியில் இந்திய உளவு நிறுவனமும் இணைந்து செயலாற்றி வருவது குறித்த தகவல்கள் கொழும்பு ஆங்கில ஊடகங்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உளவு நிறுவனங்களின் புலம்பெயர் தமிழர்கள் மீதான நடவடிக்கைகள் நான்கு பிரிவுகளாகப் பிரித்து, நடைமுறைப்படுத்தும் திட்டம் வகுக்கப்பட்டது.
1) விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்களை அச்சத்தினுள் வைத்திருப்பது. இதற்காக இந்தியா அமெரிக்காவின் உதவியையும் பெற்றுக்கொண்டது. இந்த நகர்வினையடுத்தே புலம்பெயர் நாடுகளெங்கும் தமிழ்த் தேசிய பணியாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவல்களிலும் வைக்கப்பட்டனர். கடந்த சில நாட்களின் முன்னர் பாரிஸ் நகருக்கு வந்திருந்த ஜெர்மனியில் பலம்பெயர்ந்து வாழும் சிங்கள ஊடகவியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். சனல் 4 இல் முதன்முதலில் வெளிவந்த தமிழ் இளைஞர்களைச் சுட்டுப் படுகொலை செய்யும் காணொளிக் காட்சிகளை அதற்கு வழங்கியவர்களும் இவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
2) விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்கள் மீதான புலம்பெயர் தமிழ் மக்களது நம்பிக்கையைச் சிதறடிக்கும் நகர்வுக்கு, விடுதலைப் புலிகளின் அதிருப்தியாளர்களும், சில இணையத் தளங்களும் புலனாய்வு அமைப்புக்களால் பயன்படுத்தப்பட்டது. முள்ளிவாய்க்காலின் பின்னர் அணி பிரிந்து கருத்து மோதல்கள் பரிந்தவர்களும் நிலமையின் கொடூரம் புரியாமலேயே இந்தத் தளத்தில் இணைந்துகொண்டனர். ஆனாலும், இந்த உளவியல் போர் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுக் கொடுக்கவில்லை. எனவே, இதற்காக உள்வாங்கப்பட்டவர்கள் மூலமாக, விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்களின் பலத்தைச் சிதைப்பதற்கான முயற்சியாக, புலம்பெயர் நாடுகளில் புதிய எதிர்த் தளங்கள் உருவாக்கப்பட்டன. அதற்கான பெரும் நிதியும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
3) புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்குவது. இதற்காக, நாடு கடந்த தமிழீழ அரசு குறி வைக்கப்பட்டது. கே.பி. அவர்களால் முன்மொழியப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் கே.பி. குழுவினரே பலமான நிலையில் உள்ளார்கள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக திரு. ருத்திரகுமாரன் அவர்கள் பதவி வகித்தாலும், அவர் கே.பி. குழுவினரின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே வைக்கப்பட்டுள்ளார். இது, சிங்கள – இந்திய புலனாய்வாளாகளின் காய் நகர்த்தல்களுக்கு மிகவும் இலகுவானதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் திட்டமிட்ட வகையில் வடிவமைக்கப்பட்டது. தமிழ்த் தேசிய கடும்போக்காளாகள் அங்கிருந்து வெளிநகர்த்தப்பட்டார்கள். கடந்த வார இறுதியில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துடன் இந்திய உளவுத் துறையான ‘றோ’ நெருக்கமான தொடர்புகளைப் பெணி வருவதாக கொழும்பு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியினை நிராகரிக்க முடியாது.
4) தமிழ்த் தேசிய ஊடகங்கள் மீதான சிதைவு முயற்சிகள். அண்மைக் காலமாக, புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் மீது பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. ‘ஈழம் ஈ நியூஸ்’ என்ற தேசிய இணைய ஊடகத்தின்மீது சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டது. பாரிசிலிருந்து வெளிவரும் ‘ஈழமுரசு’ நிர்வாகி ஒருவர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் ஊடகங்கள் மீது தேசிய விரோத செய்திகள், கட்டுரைகளை முதன்மைப்படுத்திப் பிரசுரிக்கும்படியும், தமிழீழம் சார்ந்த செய்திகளை இருட்டடிப்புச் செய்யும்படியும் உத்தியோகபூர்வமற்ற வகைளில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பதை அதன் வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள்.
இந்த நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை தேசியத்திற்கான பாதையில் நேர்படுத்தும் புலம்பெயர் தமிழர்களது விருப்பங்களும் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அமைதியான முறையில் மாற்றங்களை உருவாக்கி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை தமிழீழத்தை மீட்பதற்கான புலம்பெயர் போராட்டக் களமாக மாற்ற முற்பட்ட தமிழ்த் தேசிய உணர்வாளர்களது நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, இரண்டாவது அமர்விலிருந்து வெளிநடப்பு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
இந்த நிலையிலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சிதைவுறுவதை விரும்பாத தமிழ்த் தேசிய உணர்வாளர்களை வெளியேற்றும் முயற்சியில் திரு. ருத்திரகுமாரன் நிர்ப்பந்திக்கப்பட்டார். இதனால், இரண்டாவது அமர்வில் விவாதிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்படாத அரசியல் யாப்பு மீது பதவிப் பிரமாணம் செய்யும்படி தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது. இரண்டாவது அமர்வில் வெளிநடப்புச் செய்த 38 உறுப்பினர்கள் தவிர, அந்த அவையில் 45 பேரே இருந்த நிலையிலும், அங்கு அயசியல் யாப்பு மீதான பிரேரணையோ, அங்கீகாரமோ நடைபெறவில்லை என அதில் சமூகமளித்திருந்த மக்கள் பிரதிநிதிகளே தெரிவித்துள்ள நிலையில், அரசியல் யாப்பு மீதான பதவிப் பிரமாணத்தை விலியுறுத்துவதன் ஊடாக தமிழ்த் தேசியத்திற்காகப் பாடுபடும் மக்கள் பிரதிநிதிகளை வெளியேற்றும் முயற்சியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள – இந்திய சதி வலையில் சிக்கியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை மீட்டெடுத்து, அதனை முழுமையான தமிழீழ விடுதலைக்கான தளமாக முன்னெடுக்கும் முயற்சியில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அணி பிரியாது ஒன்றாகச் செயற்பட்டு சிங்கள – இந்தியச் சதி வலைகளை அறுத்தெறியும் பெரும் பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு உள்ளது. இந்தப் போர்க் களத்திலும் சிங்கள தேசியம் வெல்லுமானால், தமிழீழம் என்பது கனவாகவே கலைந்துவிடும் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தேசியத்தின் பெயரால் திரு. ருத்திரகுமாரனிடம் புலம்பெயர் தமிழர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கவேண்டும்.
1) மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் தெரிவுகளை அங்கீகரிக்க வேண்டும். அல்லது, உடனடியாக அந்தத் தேர்தல் தொகுதிகளில் மீள் வாக்களிப்பு நடாத்த வேண்டும்.
2) அச்சுறுத்தப்பட்டு அல்லது வற்புறுத்தப்பட்டு இராஜினாமா செய்ய வைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை மீண்டும் உள்வாங்க வேண்டும்.
3) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை தேசிய பாதையில் கொண்டு நகர்த்த முற்பட்டு, முரண்பாடு காரணமாக வெளிநடப்புச் செய்த பிரதிநிதிகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
4) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைக்கான 115 உறுப்பினர்களுக்கான தேர்தல்களும் நியாயமாக நடாத்தி முடிக்கப்பட்ட நிலையில், புதிதாகக் கூட்டப்படும் அமர்வில் அரசியல் யாப்பு முறையாக நிறைவேற்றப்பட வேண்டும்.
5) புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களுடன் முரண்பாடுகளையும், மோதல் போக்குக்களையும் நிறுத்தி, அனைத்துத் தளங்களுடனும் இணைந்து தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் போர்க் களமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
6) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்விலிருந்து முரண்பாடு, அச்சுறுத்தல் காரணமாக வெளியேறிய கனடிய உறுப்பினர்கள் மீதான அசிங்கமான பிரச்சாரங்களையும், மிரட்டல் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் முகமாக, வெளிப்படையான கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
7) நாடு கடந்த உறுப்பினர்கள் சிலர் மேற்கொள்ளும் கட்டுப்பாடுகளை மீறிய நடவடிக்கைகள் ஏனைய உறுப்பினர்களைப் புண்படுத்துவதுடன், குழு நிலைச் செயற்பாடுகள் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்மீதான மக்களது நம்பிக்கையைத் தகர்த்து வருகின்றது. அவர்களது குழுநிலைப் போக்கை நிறுத்தி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அனைத்துத் தமிழீழ மக்களுக்குமான அதியுயர் ஜனநாயக பீடமாக உருவாக்க வேண்டும்.
இரண்டாவது அமர்வில் இடம்பெறாத அரசியலமைப்பு அங்கீகாரத்தின்மீது பதவிப் பிரமாணம் நடாத்தக் கோரும் நேர்மையற்ற, முறைகேடான அச்சுறுத்தல்களை நிறுத்த, தமிழ்த் தேசிய உணர்வாளாகளையும் இணைத்து, நாடு கடந்த தமிழீழ அரசை தேசியம் நோக்கிய பாதையில் நேர்படுத்த வேண்டும்.
தமிழ்த் தேசிய தளங்களையும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களையும் தொடர்ந்தும் நிராகரிப்பதன் மூலம், சிங்கள இனவாத தேசிய சிந்தனை புலம்பெயர் நாடுகளிலும் வெற்றி பெறுவதற்கு திரு. ருத்திரகுமாரன் அவர்களும், அவரைச் சார்ந்தவர்களும் காரணமாக இருக்கக் கூடாது என்பதை, எமது தாயகத்தின் விடுதலைக்காகத் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்கள் பெயராலும், மக்கள் பெயராலும் வேண்டுகின்றோம்.
இங்ஙனம்
- சுவிசிலிருந்து கதிரவன்.

tirsdag 22. februar 2011

lørdag 22. januar 2011

போர்க்குற்றவா(ழி)ளி

அன்புள்ள புலம்பெயர் உறவுகளுக்கு,
எங்களை சுற்றி என்ன நடக்கிறது? - வாருங்கள் எல்லோருமாக கேட்போம்

எம் தாய் மண்ணலில் தினமும் கொலையும் கொள்ளையும்!
எமது உறவுகளின் பாதுகாவலர்கள் நாங்கள்.

ஒரு கொலைகாரன் உலகத்தை வலம் வந்து தனது கொலையை நியாயப்படுத்தி கொண்டிருக்கிறான்.

நாம் இன்றும் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கறோம்.

வன்னி மண்ணில் இருந்த எமது உறவுகள் 429059, வெளிவந்தவர்கள் 282380, மீதி 146679 எங்கே?

வாருங்கள் எல்லோருமாக கேட்போம்

அமெரிக்கா சென்றுள்ள சர்வதேச போர்க்குற்றவாழி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தராஜ பக்சவின் அமெரிக்க விஜயத்தைக் கண்டித்தும், மகிந்தவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தக்கோரியும், தமிழர் தாயகப்பகுதியில் தற்போது இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளை , பாலியல் வன்கொடுமைகள், ஆள்கடத்தல்கள் போன்றவற்றைத் தடுத்து நிறுத்துமாறு கோரியும் அமெரிக்க அரசிடம் நீதியை வலியுறுத்தும் ஆர்ப்à
��ாட்டமொன்று பிரான்சில் உள்ள அமெரிக்கத் தூதுவராலயத்தின் அருகாமையில் வரும் சனிக்கிழமை பிற்பகல்3 மணிக்கு பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ளது.

இதில் கலந்து தங்கள் உணர்வை வெளிப்படுத்துமாறு அனைத்து பிரான்சுவாழ் தமிழ் உறவுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இப்பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஒபாமாவை மகிந்த சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மகிந்த சர்வதேச போர்க்குற்றத்தில் இருந்து தன்னைப் பாதுகாக்கும் தருணமாக இதனைப் பயன்படுத்தக் கூடும் என்ற நிலையில் நாம் எமது ஒருமித்த குரலை எழுப்புவதன் முலமே மகிந்தவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியும்.

எனவே அனைவரும் தங்கள் பங்களிப்பை வழங்கவேண்டிய தருணம் இது என்பதையும் தெரிவிக்கும் கடமைப்பாட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

இந்த போராட்டம் பிரான்சு நாட்டில் மே 27, 2009யில் இருந்து நாம் மறக்கமாட்டோம்" என்று தொடர் கவனயீர்ப்பு போராட்டமாக நடைபெற்று வருகிறது.

ஜனவரி 22ம் திகதி மலை 3 மணிக்கு,

Eglise de la Madeline (Métro Madeline-Ligne 8 -12)

அமெரிக்கத் தூதுவராலயத்தின் அருகாமையில்

ஜனவரி 26ம் திகதி மலை 3 மணிக்கு Assemblée Nationale (Métro Assemblée Nationale -Ligne 12, Invalides Ligne 8-13, RER C) பிரான்சுபராளுமன்றத்து அருகாமையில்

பெப்ரவரி 4ம் திகதி மலை 2 மணிக்கு Place du Paraguay (Métro Porte Dauphine Ligne 2) சிறிலங்கா தூதுவராலயத்தின் அருகாமையில், சிறிலங்கா சுதந்திர நாளை புறக்கணிப்போம், தமிழிழ தாயகத்தை வலியுறுத்துவோம்.

பெப்ரவரி 9 ம் திகதி முதல் மலை 3 மணிக்கு Assemblée Nationale (Métro Assemblée Nationale -Ligne 12, Invalides Ligne 8-13, RER C) பிரான்சுபராளுமன்றத்து அருகாமையில் ஒவ்வொரு புதன்கிழமை மாலை' நாம் மறக்கமாட்டோம்"

பெப்ரவரி 26ம் திகதி மலை 3 மணிக்கு Place de la République (Métro République -Ligne 3-5-8-9-11) பிரான்சு நாட்டு 40க்கு மேற்பட்ட அரசு, அரசசார்பட்ட அமைப்புகளுடன் ஒன்றுசேர்ந்து மாபெரும் ஊர்வலம்.

பயங்கரவாதம் என்ற சொல் நிக்கப்படும் வரை, எமது மக்களின் விடுதலை, 1948யிலிருந்து பறிக்கப்பட்ட எமது நிலங்கள் எம்மிடம் ஒப்படைக்கும் வரை, எமது மூதாதையர் தொடக்கி எமது மாவிரர் செய்த போராட்டம் நாம் நீதி கிடைக்கும் வரை நிறுத்தோம்.

வாருங்கள் எல்லோரும் ஒன்றாக நிற்போம்.....

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

பிரான்சு தமிழிழ மக்கள் பேரவை

தொடர்பு: 06 15 88 42 21