søndag 15. mai 2011

தமிழீழ புரட்சிகர மாணவர்கள்

கூட்டமைப்புக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் விடுக்கும் கோரிக்கை!

தமிழர்களுக்கு தீர்வு வழங்குவது பற்றி பேச்சுக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது தொடர்ச்சியாக சிங்கள அரசுடன் ஈடுபட்டுள்ளது.

சிங்கள அரசும் உலகை ஏமாற்ற எப்பாடுபட்டாவது மாயையான போக்கையே தொடர்ந்தும் கடைபிடிக்கின்றது.

சிங்கள அரசியல்வாதிகளின் கபட நோக்கங்களை அறியாதவர்களாக தமிழ் அரசியல்வாதிகள் இருக்க முடியாது. அதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு மிக நன்றாக தெரியும்.

சிங்கள அரசின் பேச்சுவார்த்தை தொடர்பாக அவர்களுடன் பேசுவோம் இவர்களுடன் பேசுவோம் என அறிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர்ந்த தமிழர்களை மறந்துவிட்டதாகவே சிந்திக்க வைக்கின்றது.

சிங்கள அரசுடனான பேச்சுக்களை உடனுக்கு உடன் புலம்பெயர் தமிழர்களுக்கு அறியத்தந்து அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து செயற்பட வேண்டும் என தமிழீழ புரட்சிகர மாணவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றது.

புலம்பெயர்ந்த மக்கள் தாயகத்தை விட்டு வந்து வாழ்ந்தாலும் அவர்களின் ஒவ்வொரு நொடியும் தாயகத்தை நோக்கியதாகவே இருக்கின்றது.

தாயகத்தில் வாழும் மக்கள் தங்களுடைய சொந்த கருத்துக்களையே விருப்பு வெருப்புக்களையே ரகசியமாக கூட வெளியிட முடியாத கட்டத்தில் வாழ்கிறார்கள்.

புலம்பெயர்ந்த மக்கள் தாயக மக்களின் ஒத்த கருத்துக்களையே பிரதிபளிக்கின்றார்கள் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் வேறு நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து உலக நாடுகளுக்கு செல்லவில்லையே அவர்கள் அனைவரும் பல காலம் தாயகத்தில் வாழ்ந்தவர்கள் இன்றும் அறுக்கமுடியாத பிணைப்புடனேயே வாழ்கின்றார்கள் அவர்களுக்கு கண்டிப்பாக தெரியும் தாயக மக்களுக்கு என்ன வேண்டும் என்பது.

எனவே அதிக விளக்கங்களை தவிர்த்துக்கொண்டு புலம்பெயர்ந்த மக்கள்,அமைப்புக்கள், ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள் என அனைவருடைய கருத்துக்களும் சிந்தனைகளும் உள்வாங்கி பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என தமிழீழ புரட்சிகர மாணவர்களாகிய நாம் தமிழ்த் தேசியக் கூட்மைப்புக்கு கோரிக்கை விடுக்கின்றோம்

நாங்கள்
தமிழீழ புரட்சிகர மாணவர்கள்
thanks Athirvu