onsdag 2. januar 2013

உலக தமிழர்களுக்கு



உலக தமிழர்களுக்கு இன்று சிறப்பு முகாம் தமிழர்கள் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள 23 ஈழத் தமிழர்கள் தற்போது சாகும் வரை உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . அதில் 12 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் . மருத்துவமனையிலும் அவர்கள் உண்ணா நிலை போராட்டத்தை தொடர்கின்றனர்.

அவர்கள் கூறியதாவது ..

தமிழ் நாட்டில் வாழும் ஈழ அகதிகள் விடுதலை அடைய உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் அந்தந்த நாடுகளின் இந்திய தூதரகங்களில் தங்கள் கண்டன அறிக்கையை சமர்பிப்பதுடன், பல வகையான போராட்ட முன்னெடுப்புகளை எடுக்குமாறு வேண்டுகிறோம்.

தமிழக தமிழர்களும் போராடிக் கொண்டிருக்கும் சிறப்பு முகாம் தமிழர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டுகிறோம்.