அனைத்துலகப் பெண்கள் அமைப்புகளுக்கு!
பெருமதிப்புக்குரிய உலகத்திலிலுள்ள பெண்கள் நலம் பேணும் அமைப்புகளில் பணிபுரியும் பெண்களே! இலங்கையில் மிகவும் கொடுமையான முறையில் தமிழ்ப்பெண்கள் பலியல் வல்லுறவுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாகி வருகின்றனர். இக்கொடுமையை இலங்கை அரசபடையினர் வடக்கிலும் கிழக்கிலும் இலங்கையின் கொழும்பு நகரிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் செய்து வருகின்றனர். இவர்களோடு துணைஇராணுவக்குழுக்களும் ஊர்காவலில் ஈடுபட்டு வரும் ஊர்காவற்படைகளும் இணைந்து செயற்பட்டுவருகின்றனர். இதனால் மிகப்பெரிய அவலம் நிகழ்வதை உலகஅமைதிக்கான அமைப்புகளோ உலகபெண்கள்அமைப்புகளோ கண்டுகொள்ளாதது
மனதுக்குக்கவலையளிக்கிறது. இலங்கையில் தமிழ்ப்பெண்கள் துன்புறுத்தப்படுவதை கண்டித்து உலகத்தின் அறமன்றத்தில் இலங்கை அரசுக்கெதிராக வழக்குத்தொடருவீர்களென எதிர்பார்கின்றோம்
நன்றி.
இப்படிக்கு
தமிழரசன்.அரசன்
03.03.2009.